கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கர்நாடக அரசு குளிர்சாதன சொகுசு பேருந்து தினந்தோறும் மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு தர்மஸ்தலம் சென்றடைகிறது. சத்தியமங்கலம், மைசூர், மடிக்கேரி, சூல்யா, குக்கேசுப்பிரமணியா, வழியாக தர்மஸ்தலம் சென்றடைகிறது.
மறுபாதையில் தர்மஸ்தலத்தில் இருந்து மங்களூர் சென்றடைகிறது. இதனை அடுத்து மங்களூரில் இருந்து அதே பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 8 மணி அளவில் கோவை வந்து சேர்கிறது. தினந்தோறும் இந்த பேருந்தானது இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக போக்குவரத்து துணை இயக்குனர் சிவகுமார், ஓய்வு பெற்ற துணை இயக்குனர் உதயகுமார்,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் செந்தில், மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்யகுமார், கர்நாடகா அரசு போக்குவரத்துக் கழக பொறுப்பாளர் ரவி, கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற மேலாளர் ஜெயபாலன், டி.என். எஸ்.டி.சி கார்ப்பரேஷன் கமர்சியல் ராதாகிருஷ்ணன், எஸ்.சி.எஸ்.டி.சி கிளை மேலாளர் ஜாபர், காந்திபுரம் காவல் நிலைய ஆய்வாளர் லதா, ரயில்வே ஜமீல் அகமது, ஆகியோர் ஒவ்வொரு பயணிகளுக்கும் ரோஜாமலர் கொடுத்து பயணம் இனிதே அமைய வேண்டுமென அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கொடிசைத்து பேருந்து போக்குவரத்தினை துவக்கி வைத்தனர். இதற்கான தற்போதைய கட்டணம் 1050 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழக பொறுப்பாளர் தெரிவித்தார்.
கூடுதல் தகவல்களுக்கு 0422 2523032, 0422 2457585 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். இதனை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
– சீனி, போத்தனூர்.