கோவை ஆர்.எஸ்.புரம். காந்தி பார்க் ரவுண்டானா அருகே எஸ்.பி. ஐ.வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு ஏ.டி.எம்.,க்குள் ஒருவர் புகுந்து கண்காணிப்பு கேமராவை இழுத்தால் அபாய மணி ஒலித்தது. இது தொடர்பாக மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கும் தகவல் கிடைத்தது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து உடனடியாக ஆர்.எஸ் புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் -இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரிக்கையில், தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த வனராஜா,33, என்பது தெரியவந்தது.
‘சிசி டிவி’ கேமராவை கழற்றி விட்டு, ஏ.டி.எம்., இயந்திரத்தை கம்பியால் உடைத்து கொள்ளையடிக்க முயன்றது, விசாரணையில் தெரியவந்தது . இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.