நோ பேனிக், உதவி கமிஷனர் அறிவிப்பு!
கோவை மாவட்டம் போத்தனூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை கூட்டம் போத்தனூர் D3 காவல் நிலையத்தில் உதவி ஆணையாளர் சதீஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் உதவி ஆய்வாளர் தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார் மற்றும் துணை ஆய்வாளர் முருகேஷ் குற்றப்பிரிவு ஆய்வாளர் மற்றும் குறிச்சி பகுதி கிராம அதிகாரி அவர்கள் உரையாற்றினார்கள்.
போத்தனூர் சரக உதவி ஆணையாளர் திரு சதீஷ்குமார் அவர்கள் உரை நிகழ்த்தும்போது வருகின்ற 31 10 2022 அன்று பாஜக அறிவித்துள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க காவல்துறை அனைத்து விதமான ஏற்படும் செய்துள்ளது வியாபாரிகள் எந்த விதமான அடக்குமுறைக்கும் அச்சப்பட வேண்டியதில்லை வியாபார கடைகள் வழக்கம் போல் திறந்து வியாபாரம் செய்யலாம் உங்களுக்கு ஏதேனும் மிரட்டல்களோ அச்சுறுத்தலோ வரும் என்று சொன்னால் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்,
மேலும் மளிகை கடைகள்,டீக்கடைகள் ஹோட்டல்கள் மற்றும் அனைத்து கடைகளையும் இரவு 11 மணி முதல் காலை 6:00 மணி வரை அடைத்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், மேலும் பேருந்துகள், போக்குவரத்து வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்றார், வருவாய்த்துறை அதிகாரி உரை நிகழ்த்தும் பொழுது காவல்துறை உங்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கும் மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையும் இப்பொழுது இல்லை கோவை மாவட்டம் முழுவதும் காவல் துறையின் கண்காணிப்பிலே அவருடைய தீவிர கண்காணிப்பில் இருக்கிறது ஆகையால் மக்கள் அச்சப்படாமல் யாருடைய அடக்குமுறைக்கும் அஞ்சாமல் வழக்கம் போல் கடைகளை திரந்து வைக்குமாறு கேட்டுக்கொன்டார், இந்த கூட்டத்தில் போத்தனூர், சுந்தராபும் பகுதி வியாபரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பகுதி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.
-A. சையத் காதர் குறிச்சி.