கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஜிஆர்ஜி கல்விக் குழுமத்தின் சார்பாக நவராத்திரி விழாவை முன்னிட்டு ஜிஆர்ஜி மெலோடீஸ் என்ற இசைக் கச்சேரியை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன் தொடர்ச்சியாக ஆறாம் ஆண்டு விழா இசை கச்சேரி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கென தனிப்பாடலும் , குழுப்பாடல்களை மேடையில் பாடி அசத்தினர் .
கர்நாடக இசையை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல் நமது பண்பாட்டையும் , கலாச்சாரத்தையும் வளர்க்கும் விதமாக ஜிஆர்ஜி நிறுவனங்களில் கொலு வைத்தனர். மேலும் 75 வது சுதந்திர தின வருடத்தை மையமாக வைத்து கொலு அமைந்தது.
மேலும் , இது போன்ற விழாக்களை ஆண்டு தோறும் நிகழ்த்தி இசைக்கலையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அரங்கேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தும் , அவர்களை ஊக்குவித்து வருவதாக ஜிஆர்ஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் நந்தினி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
– சீனி, போத்தனூர்.