கோவை மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலை ரோட்டை சேர்ந்த சையது இஸ்மாயில் மகன் ஆரியான், 20. கோவை, அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர் நேற்று காலை பைக்கில் பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குமார் நகர் சிக்னல் அருகே சென்ற போது, பின்னால் வந்த ‘ஈச்சர்’ சரக்கு வேன், பைக் மீது மோதியது. கீழே விழுந்த ஆரியான் தலையின் மீது வேனின் பின்சக்கரம் ஏறியதால் தலைநசுங்கி உயிரிழந்தார்.
இந்த விபத்திற்கு குறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று
சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவரை பிடித்து விசாரித்துவருகின்றனர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.