சாய் கண்ணன் பட்டாசு கடை திறப்பு விழாவில், ஆதரவற்றோர் 50 பேருக்கு புத்தாடைகள், பட்டாசுகளை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார். கோவை பூ மார்க்கெட் சாலையில் தேவாங்கர் கல்யாண மண்டபம் அருகே சாய் கண்ணன் பட்டசு கடை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
இந்த பட்டாசு கடையை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து ஆதரவற்றோர் 50 பேருக்கு பட்டாசுகள் மற்றும் புத்தாடைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் சாய் கண்ணன் பட்டாசு கடை உரிமையாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நகர மற்றும் அபிவிருத்தி குழு தலைவர் சோமு (எ) சந்தோஷ், 70வது வார்டு கவுன்சிலர் சர்மிளா சுரேஷ், சரவணபாபா அறக்கட்டளை தலைவர் கே.மணிகண்டன், சாய்பாபா அறக்கட்டளைத் தலைவர் சாய் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிவகாசி விலையில் கோவையில் பட்டாசு கடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் குற்றாலம், பீக்காக்,
போட்டோ பிலிம், லாலி பாப், வாட்ஸ் அப், ஹெலிகாப்டர் ஆகிய புதிய ரக பட்டாசுகள் வந்துள்ளன.
பட்டாசு கடையில் ரூ.5 ஆயித்துக்கு பட்டாசுக்கள் வாங்குபவர்களுக்கு வெள்ளிக்காசும், ரூ.10 ஆயிரத்திற்கு பட்டாசுகள் வாங்குபவர்களுக்கு தங்க நாணயமும் வழங்கப்படவுள்ளது. போலி விளம்பரங்களை நம்பாமல், நேரடியாக விற்பனையகத்துக்கு வந்து பட்டாசு ரகங்களை பார்த்து, தரமான பட்டாசுகளை குறைவான விலையில் வாங்கி தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடுமாறு கடை உரிமையாளர் செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.
– சீனி, போத்தனூர்.