சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி காசியாபிள்ளை நகரில் வசித்து வருபவர் ராஜசேகரன். அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.
ஆசிரியர் ராஜசேகரனின் மகளை இன்று அதிகாலை 2.30 மணியளவில் காரைக்குடியிலுள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்திருப்பதாக தகவல் வந்ததையடுத்து கணவன்,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மனைவி இருவரும் உடனே வீட்டைப் பூட்டி விட்டு காலை 3 மணியளவில் காரைக்குடிக்கு கிளம்பிச் சென்றுள்ளனர்.
காலை 8 மணிக்கு மேல் அக்கம் பக்கத்தினர் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு, ஆசிரியர் ராஜசேகரனுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆசிரியர் ராஜசேகரும் அவரது மனைவியும் காரைக்குடியில் இருந்து உடனடியாக சிங்கம்புணரி திரும்பினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், பீரோவை உடைத்து அதில் இருந்த சுமார் 30 பவுன் நகை, ₹.2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அதிகாலையில் ஆசிரியர் தம்பதியினர் அவசரமாக கிளம்பி சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே சென்று பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சிங்கம்புணரி காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.