சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி MVS நகரில் வசித்து வருபவர் லதா (வயது45). இவரது கணவர் பாஸ்கரன் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், திருமண வயதில் உள்ள ஒரு மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர் நேற்று காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு சிங்கம்புணரி அருகே உள்ள மணப்பட்டி கிராமத்தில் தனது அக்கா பஞ்சு என்பவரின் இல்ல புதுமனை புகுவிழாவிற்குச் சென்றுள்ளார்.
நேற்று மாலை 3 மணியளவில் வீடு திரும்பிய லதா,
வீட்டுக்கதவை திறந்து சென்று பார்த்தபோது உள்ளே இருந்த மரத்தாலான பீரோ மற்றும் இரும்பு பீரோ இரண்டும் உடைக்கப்பட்டு, அவரது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த 35 சவரன் நகை மற்றும் ₹.75 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
உடனடியாக சிங்கம்புணரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் முத்து மீனாட்சி சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை செய்தார்.
கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சிங்கம்புணரி காவல் சார்பு ஆய்வாளர் குகன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிங்கம்புணரியில் 3 மாதத்திற்குள் மூன்றாவது முறையாக கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.