சிங்கம்புணரியில் பாலத்தின் மீது கார் மோதி விபத்து! நல்வாய்ப்பாக அனைவரும் உயிர்தப்பினர்!

திண்டுக்கல்லைச் சேர்ந்த லூர்துசாமி என்பவரது மகன் செல்வம் (வயது 46) தனது குடும்பம் மற்றும் தனது நண்பர்களுடன் அவர்களது வாகனத்தில் சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கோவிலுக்கு நேற்று வந்துள்ளனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் திண்டுக்கல் திரும்பும் வழியில் அவர்கள் சென்ற வாகனம் சிங்கம்புணரி நகர் பகுதியில் தீயணைப்பு நிலையத்திற்கு சற்று முன்பு வந்தபோது, இவர்களுக்கு முன்னதாக சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து, சாலையின் நடுவே திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது கார் ஓட்டி வந்த செல்வம், பேருந்தின் மீது மோதுவதைத் தவிர்ப்பதற்காக உடனடியாக சாலையின் வலதுபுறம் காரை திருப்பியுள்ளார்.

அதன் விளைவாக, கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே உள்ள பாலத்தின் விளிம்பில் மோதி, பாலத்தின் பக்கவாட்டுப் பகுதியில் தொங்கியது. நல்வாய்ப்பாக காரிலிருந்த அனைவரும் காயங்களின்றி உயிர் தப்பினர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

செல்வத்தின் சாமர்த்தியத்தால் அருகிலிருந்த உயர் மின் அழுத்த கம்பத்தில் மோதாமலும், பாலத்தின் மீது மோதாமலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கம்புணரி காவல்துறையினர், விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp