சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூர் பெரிய பாலத்துக்கருகில் வசித்து வருபவர்கள், தெய்வசிகாமணி என்பவரின் மகன்கள் ராஜா மற்றும் சண்முகசுந்தரம்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று தீபாவளி முடிந்த நிலையில் மீதமிருந்த வெடிகளை இன்று காலை அவர்களது வீட்டில் உள்ள குழந்தைகள் வெடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சில குரங்குகள் நெருப்புடன் இருந்த கம்பி மத்தாப்புகளை வீட்டின் முன்புறம் இருந்த கூரைத் தாழ்வாரத்தின் மேல் போட்டுச் சென்றன.
அதன் விளைவாக கூரை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக வந்த சிங்கம்புணரி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.
வீட்டில் இருந்த வாஷிங் மெஷின், குளிர்சாதன பெட்டி மற்றும் பல்வேறு சாதனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
– பாரூக், சிவகங்கை.