சின்னக்கானல் கிராம பஞ்சாயத்தில் 10-ம் வார்டில் 1 ஏக்கர் அளவுள்ள பஞ்சாயத்து சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாடு கடந்த 40 வருடங்களாக பஞ்சாயத்தின் கையில் இருந்தும் பொதுஜனங்களுக்கு பயன்படுத்த முடியாத அவலநிலையில் உள்ளது.
இந்த சுடுகாட்டிற்க்கு செல்வதற்கு 10 அடி பாதை இருந்தும் வேறொரு தனிநபரின் உதவியோடு அவருடைய பாதையில் தான் இங்கு செல்ல வேண்டிய அவலநிலையானது உள்ளது. அடுத்தடுத்து இந்த பஞ்சாயத்தின் பதவியை மட்டும் வைத்துக்கொண்டு சாதாரண மனிதனின் அடிப்டைத் தேவையை கூட சரி செய்யமுடியாத பெரிய தலைவர் மற்றும் தலைவிகளும் இந்த பஞ்சாயத்தில் வாழும் மக்களின் வரி பனத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்யக்கூடிய அதிகாரிகளுடைய அஜாக்ரதையும், கவனக்குறைவும் காரணம்.
ஒரு சாதரண மனிதனின் மரனத்திற்க்கு பிறகு அவரது உடலை அடக்கம் செய்ய முடியாத அவல நிலையானது உள்ளது நாம் பல காரியங்களக்கு வேண்டி போராட்டம் நடத்துகிறோம் ஆனால் நாம் ஒருவர் கூட இந்த பொது சுடுகாட்டிற்க்கு வேண்டி குரல் கொடுப்பதற்க்கு தாயார் இல்லை என்பது வருத்தத்தை அளிக்கின்றது. இது நம் அறியாமையல்ல நம்முடைய அவலநிலை.
விரைவாக குறுகிய நாட்களில் இந்த சுடுகாட்டின் பாதையை கண்டறிந்து பொதுஜனங்கள் உபயோகபடுத்தும் நிலையில் சரி செய்து தரவில்லை என்றால் சின்னக்கானல் AIYF தோழர்களின் சார்பில் போராட்டத்தின் வழியில் இந்த பாதையை கண்டுபிடித்து மக்களுக்கு உபயோகபடுத்தும் நிலையில் சரிசெய்து தரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஜான்சன், மூணார்.