12 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், உலக சாம்பியன்களின் படங்களுடன் `நான் சிறப்புமிக்கவன் 2023’ காலண்டரை வெளியிட்ட சுவர்கா பவுண்டேஷன். கோயம்புத்தூர், தமிழ்நாடு சுவர்கா பவுண்டேஷன் 8வது ஆண்டு விழாவையொட்டி தனது 8வது பதிப்பான `நான் சிறப்புமிக்கவன் 2023‘ காலண்டரை அக்டோபர் 8-ந்தேதி கோவை ரெசிடென்சி ஓட்டலில் அறிமுகம் செய்தது.
புதிய காலண்டர் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசீர்வாதத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவை கலெக்டர் ஜி.எஸ். சமீரன், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே. மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுவர்கா பவுண்டேஷன் பற்றி
80-ஜி வருமான வரி விலக்கு சான்றிதழ் பெற்றுள்ள சுவர்கா பவுண்டேஷன் அக்டோபர் 2014 அன்று சுவர்ணலதா அவர்களால் துவக்கப்பட்டது. அவர் உடல் திசுக்கள் கடினமாதல் என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.
அவரது கணவர் பெயர் குருபிரசாத். சுவர்காவின் நோக்கம்
மத்திய நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் இதர நரம்பு தசை கோளாறுகள் ஆகியவை குறித்து பொதுமக்கள் ஒவ்வொரும் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சுவர்கா அமைப்பு நடத்தி வருகிறது. இது பொதுமக்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது மற்றும் பொதுமக்களிடையே உள்ள குறைபாடுகள் பற்றிய தவறான எண்ணங்களை போக்கவும் அவர்களை மேம்படுத்தவும் அரும்பணியாற்றி வருகிறது.
சுவர்கா செய்வது என்ன!
மத்திய நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் இதர நரம்பு தசை கோளாறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது
மறுவாழ்வுக்கு உதவுவதன் மூலம் நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது
இயலாமையில் இருந்து இயலும் நிலைக்கு மாற்றுகிறது.
ஒவ்வொருவரும் சாதிக்க முடியும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது
சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உன்னத இடத்தை அளிக்கிறது
நோயாளிகளுக்கு ஆலோசனை அளித்தல், பராமரிப்பாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு விரும்பும் வாழ்க்கையை அளிக்க உதவுகிறது
சுவர்காவின் சிறப்பு திட்டங்கள்
போக்குவரத்து வசதி : சாரதி திட்டம் – சக்கர நாற்காலிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறும் வசதியை சுவர்கா கடந்த 3 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இதன் மூலம் 3 மாநிலங்களில் உள்ள 15 நகரங்களில் 350 க்கும் மேற்பட்ட பயனாளிகள் 50,000 கி.மீ. பயணம் செய்கின்றனர்.
உள்கட்டமைப்பு வசதி : கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பத்து அரசுப் பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியை பயன்படுத்தி கழிப்பறைகளுக்கு செல்லும் வகையில் கட்டமைப்புகளை அமைத்துக் கொடுத்துள்ளது. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 35 அடி சரிவான மற்றும் சக்கர நாற்காலியை பயன்படுத்தி கழிவறைக்கு செல்லும் வகையில் பிரத்யேக வாகன நிறுத்துமிடத்துடன் கட்டிக் கொடுத்துள்ளது. கோயம்புத்தூர் ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகளை சீரமைத்து கொடுத்துள்ளது. Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ திருப்பிச் செலுத்துதல்: இதுவரை 330 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கல்வி, அறுவை சிகிச்சை, மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற பல்வேறு தேவைகளுக்கு 20 லட்சத்துக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது.
மறுவாழ்வு: சவுக்கியா பிசியோதெரபி & வெல்னஸ் சென்டர் மூலம், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நரம்பியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளது.
நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 40 படுக்கைகள் கொண்ட ஒரு விரிவான மறுவாழ்வு மையத்தை நிறுவி வருகிறது. இது நாட்டில் முதலாவதாக அமைக்கப்படும் மறுவாழ்வு மையமாகும்.
`நான் சிறப்புமிக்கவன் 2023’ – 8வது பதிப்பாக இந்த ஆண்டு இந்த காலண்டர் வெற்றிகரமாக வெளிவந்துள்ளது. இந்த 2023ம் ஆண்டு காலண்டர் ‘வெற்றியாளர்களின்’ படங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
காலண்டரின் நோக்கம் – பாராலிம்பிக்ஸ் மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக பதக்கங்களை வென்ற 12 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் இந்த காலண்டரில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் உலக சாம்பியன்கள், அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் ஆவார்கள். இந்த காலண்டர் விளையாட்டு சம்பந்தமாக அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வெளிவந்துள்ளது.
மாடல்கள் பற்றி
1. தீபா மாலிக் – ஷாட் புட், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், நீச்சல், மோட்டார் சைக்கிள்
2. மனோஜ் சர்க்கார் – பேட்மிண்டன்
3. வருண் சிங் பாடி – உயரம் தாண்டுதல்
4. ஏக்தா பயான் – தடகளம், வட்டு எறிதல்
5. கார்த்திக் கருணாகரன்– டென்னிஸ்
6. மாரியப்பன் தங்கவேலு – உயரம் தாண்டுதல்
7. மானசி ஜோஷி – பேட்மிண்டன்
8. தேவேந்திர ஜஜாரியா – ஈட்டி எறிதல்
9. ஹவிந்தர் சிங் – வில்வித்தை
10. கீதா சௌஹான் – கூடைப்பந்து, டென்னிஸ், சக்கர நாற்காலி பந்தயம்
11. சுயாஷ் நாராயண் சௌஹான் – நீச்சல்
12. சுமேதா பதக் – துப்பாக்கி சுடுதல்
நான் சிறப்புமிக்கவன் காலண்டர் 2023 இன் முக்கிய அம்சங்கள்:
1. டெஸ்க்டாப் விருப்பங்களில் கிடைக்கிறது, தேவைக்கேற்ப பெருநிறுவன சின்னங்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. தரமான காகிதத்தில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது.
3. காலண்டர் விற்பனை மூலம் கிடைக்கும் அனைத்து வருமானமும் நரம்பு – தசைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிசியோதெரபி மையத்தை அமைக்க உதவும்.
– சீனி,போத்தனூர்.