கேரளா மாநிலம் தொடுபுழா பகுதியை சேர்ந்த விஜய நாராயணன் என்பவர் நீண்ட காலமாக முயற்சி செய்து ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார். சாதாரணமாக ஒரு மிக்ஸியை வைத்து ஜூஸ் மற்றும் போட்டிகள் சட்னி போன்றவை அரைக்க முடியும்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆனால் இந்த மிக்ஸியின் மிக முக்கியமான சிறப்பம்சம் இதற்கு மின்சாரம் தேவையில்லை இவை சோலாரில் இயங்கக் கூடியவை ஆகும் இதில் மாவு மற்றும் சட்னி அரைப்பது மட்டுமல்லாது தேங்காய் துருவவும் காய்கறிகளை வெட்டவும் சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுது பாடல்களை கேட்க எப்.எம் பாடல்களை கேட்கவும் pendrive மூலமாக பாடல்களை கேட்கவும் முடியும்.
அது மட்டுமல்லாது இரவு நேரங்களில் வெளிச்சத்திற்கு அதில் ஒரு சோலார் விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது அது மட்டுமல்ல அது சமையலறையில் அந்த பகுதியை சுத்தம் செய்ய வேக்கம் கிளீனராகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதை சந்தை படுத்துவதற்கு தயாரான நிலையில் உள்ளதாகவும் அதற்கு தனது பொருளாதார தேவைகளை சரி செய்ய நிறுவனம் முன் வரும் என்று எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டிருக்கிறார் மிக்ஸி 5 ஆயிரம் ரூபாய் முதல் 8000 வரைக்கும் இதை விற்க முடியும் என்று பிஜூ கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.