தாமிரபரணி ஆற்றில் தூர்வாரும் பணி ஆட்சியர் துவக்கி வைத்தார்!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசன அமைப்பில் சிறப்பு தூர்வாரும் பணியை ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கடந்த ஆட்சியில் தமிழ் நாடு முழுவதும் குடிமராமத்து திட்டம் அறிமுகம் செய்தார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழ்நாட்டில் உள்ள வற்றாத ஜீவநதிகளில் தாமிரபரணி ஆறும் ஒன்றாகும். தூமிரபரணி ஆறான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொதிகை மலையில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னக்காயல் என்னுமிடத்தில் கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்றின் பாசன அமைப்பில் 8 அணைக்கட்டுகளும், 11 பிரதான கால்வாய்களும் அமைந்துள்ளன. இதன் மூலம் மொத்தம் 86107 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன. Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ தூத்துக்குடி மாவட்டத்தில் 2 அணைக்கட்டுகளும் 4 பிரதான கால்வாய்களும் இடம் பெற்றுள்ளன. இதில் கடைசி 2 அணைக்கட்டுகளான மருதூர் அணைக்கட்டு மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு ஆகும். மருதூர் மேலக்கால் வாய்க்கால், மருதூர் கீழக்கால் வாய்க்கால், தென்கால் பிரதான கால்வாய் மற்றும் வடக்கு பிரதான கால்வாய் ஆகும். இந்த வாய்க்கால்கள் மூலம் 53 குளங்கள் பாசன வசதி பெறுகின்றன.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தாமிரபரணி பாசன அமைப்பில் சிறப்பு தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டு வடகால் வாய்க்கால் தூர்வாரும் பணிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் திருவைகுண்டம், வரதராஜபுரம், கீழ்பிடாகை கஸ்பா, மங்கலகுறிச்சி, சிறுத்தொண்டநல்லூர், கொட்டாரக்குறிச்சி, இருவப்பபுரம், ஆறுமுகமங்கலம், பழையகாயல், அகரம், மஞ்சள் நீர்காயல், கொற்கை, வாழவல்லான், சாயர்புரம், திருப்பணி செட்டிக்குளம், சேர்வைக்காரன்மடம், குலையன்கரிசல், அத்திமரப்பட்டி மற்றும் கோரம்பள்ளம் ஆகிய கிராமங்கள் பெரிதும் பயன்பெறும்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பொறி.மாரியப்பன், நீர்வளத்துறை உதவிபொறியாளர் பொறி.பாஸ்டின்வினோ, ஏரல் வட்டாட்சியர் கண்ணன், மங்களகுறிச்சி ஊராட்சிமன்ற தலைவர் பேச்சியம்மாள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-முனியசாமி ஓட்டப்பிடாரம் நிருபர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp