பண்டிகை நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்குச் செல்ல பெரும்பாலும் ரயில் போக்குவரத்தையே நம்பி வருகின்றனர். ஆனால் ரயில் டிக்கெட்கள் முன்பதிவு தொடங்குய சில நிமிடங்களிலேயே தீர்ந்து போகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதிலும், குறிப்பாகப் பயணத்தைப் கடைசி நேரத்தில் திட்டமிடும் பயணிகள் பலர் அரசுப் பேருந்தில் இடம் கிடைக்காத நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் பயணம் செய்வது வழக்கம். இதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை அடிப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகிறது.
இதையடுத்து புதிய பயண கட்டண பட்டியல் வெகு விரைவில் வெளியிடப்படும் என்று ஆம்னி பேருந்து சங்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது புதிய கட்டண பட்டியலை வெளியாகியுள்ளது.
எந்த எந்த ஊருக்கு என்னென்ன விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்:
சென்னை – கோவை: குறைத்த பட்சம் ரூ1815 முதல் அதிகபட்சம் 3025
சென்னை – மதுரை: குறைந்த பட்சம் ரூ1776 முதல் அதிகபட்சம் 2688
சென்னை – சேலம்: குறைந்த பட்சம் ரூ1435 முதல் அதிகபட்சம் 2109
சென்னை – பழனி குறைந்த பட்சம் ரூ1650 முதல் அதிகபட்சம் 2750
சென்னை – தென்காசி குறைந்த பட்சம் ரூ 2079 முதல் அதிகபட்சம் 3465
சென்னை – திருநெல்வேலி குறைந்த பட்சம் ரூ 2063 முதல் அதிகபட்சம் 3437
சென்னை – திருப்பூர் குறைந்த பட்சம் ரூ 1667 முதல் அதிகபட்சம் 2777
சென்னை – நாகப்பட்டினம் குறைந்த பட்சம் ரூ 1271 முதல் அதிகபட்சம் 1767
சென்னை – திருச்சி குறைந்த பட்சம் ரூ 1394 முதல் அதிகபட்சம் 1938
சென்னை – உடன்குடி குறைந்த பட்சம் ரூ 2211 முதல் அதிகபட்சம் 3630
சென்னை – திருச்செந்தூர் குறைந்த பட்சம் ரூ 2112 முதல் அதிகபட்சம் 3520
சென்னை – ஆறுமுகநேரி குறைந்த பட்சம் ரூ 2079 முதல் அதிகபட்சம் 3465
சென்னை – ஆத்தூர் குறைந்த பட்சம் ரூ 2063 முதல் அதிகபட்சம் 3437
சென்னை – தூத்துக்குடி குறைந்த பட்சம் ரூ 2013 முதல் அதிகபட்சம் 3355
சென்னை – தென்காசி குறைந்த பட்சம் ரூ 2079 முதல் அதிகபட்சம் 3465
ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-செந்தில் முருகன், சென்னை தெற்கு.