தூத்துக்குடியில் துப்பாக்கியுடன் 2ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவுபடி டவுன் டிஎஸ்பி சத்தியராஜ் ஆலோசனைப்படி தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் சப் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார் மற்றும் போலீசார் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள பீங்கான் ஆபீஸ் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் 6வது தெருவை சேர்ந்த பிரவின் மகன் ஜான்சன் (45) என்றும் தற்போது இவர் சென்னை இலவூர் பகுதியில் வசித்து வருவதாகவும், மற்றொருவர் தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் முனியசாமி (44) என்றும் தற்போது இவர் திருவள்ளூர் மாவட்டம் கலைஞர் நகர் கண்ணாடி குளம் பகுதியில் வசித்து வருவதாகவும் தெரியவந்தது.
மேலும் இவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கியும் 4 தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் பிரபல ரவுடிகள் ஆவார்கள் இவர்கள் மீது தூத்துக்குடியில் உள்ள காவல் நிலையத்தில் கொலை கொள்ளை கொலை முயற்சி வழக்குகள் உள்ளது தற்போது தூத்துக்குடி கோட்டில் 2 பேருக்கும் பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஏற்கனவே போலீசார் தேடி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. தூத்துக்குடியில் நாட்டு துப்பாக்கியுடன் 2ரவுடிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.