தேசிய கால்நடை இயக்க திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் தொழில் அதிபர்களை உருவாக்கும் திட்டத்தில் பயனடைய விருப்பமுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய தேசிய கால்நடை இயக்க திட்டத்தின் கீழ் தொழில் அதிபர்களை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு முதலீட்டில் 50% மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்ந்து தொழில் அதிபர்கள் விரும்புவோர் தனிநபர், சுயஉதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியோரை தொழில் அதிபர்களை உருவாக்க மானியம் வழங்கப்படும்.
கிராமபுற கோழிகள் இனமேம்பாட்டிற்காக தொழில் அதிபர்களை நிறுவுதல் 50% மானியம் அல்லது அதிகபட்சம் 25 இலட்சம் மானியம், வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் இனவிருத்திக்காக தொழில் அதிபர்களை உருவாக்குதல், 50% மானியம் அல்லது அதிகபட்சம் 50 இலட்சம் மானியம், பன்றி வளர்ப்பில் தொழில் அதிபர்களை உருவாக்குதல் 50 இலட்சம் மானியம் அல்லது அதிகபட்சம் 30 இலட்சம் மானியம் தீவன உற்பத்தியை பெருக்குதல் மற்றும் சேமிப்பு அலகு நிறுவுதல் 50% மானியம் அல்லது அதிகபட்சம் 50 இலட்சம் மானியம்.
இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய விருப்பமுள்ள பயனாளிகள் பொதுதுறை வங்கிகள் மூலமாகவோ மற்றும் சுயநிதி நிறுவனத்திடமிருந்து கடன்பெற்று திட்டத்தினை செயல்படுத்தலாம். இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ளோர் உரிய ஆவணங்கள் மற்றும் விரிவான திட்ட அறிக்கைகளுடன் உதய மித்ரா போர்டலில்
இணைய தளம் :
https://nlm.udayamimithra.in
பதிவேற்றம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.