கோவையில் கலாம் மக்கள் அறக்கட்டளை, நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கோவை ஆர்.எஸ்.புரம் பெண்கள் மேல்நிலைபள்ளியில் படிப்போம் உயர்வோம் எனும் அப்துல் கலாம் குறித்த மாற்றத்தை நோக்கி எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவையில் கலாம் மக்கள் அறக்கட்டளை யினர் அப்துல்கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் குறித்த பல்வேறு சிறப்புகளை கூறும் வகையில் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கலாம் மக்கள் அறக்கட்டளை, பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் தி இந்து ஆங்கில இதழ் இணைந்து கோவை ஆர்.எஸ்.புரம் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் அப்துல்கலாம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வாழ்வில் முன்னேற வாசிப்பு திறன் அவசியம் என்பதை மாணவிகளிடையே வலியுறுத்தும் விதமாக மாற்றத்தை நோக்கி படிப்போம் உயர்வோம் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில்,கலாம் மக்கள் அறக்கட்டளையின் நிறுவனரும்,பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி வட்டார தலைவரும் ஆன செந்தில் குமார் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் ரங்கநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்ட ஆளுநனர் ராம் குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மறைந்த முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் குறித்த சிறப்பு தகவல்களை வழங்கிய மாணவிகளுக்கு கலாம் உருவப்படத்தை மாவட்ட ஆளுநர் பரிசாக வழங்கினார்.
தொடர்ந்து தி இந்து நாளிதழில் அப்துல் கலாமின் வரலாறு அவர் குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய சிறப்பு கட்டுரை பிரசுரத்தை வெளியிட்டு பேசிய மாவட்ட ஆளுநர் ராம்குமார் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு மாணவ,மாணவிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் மேலும் பள்ளியில் பயிலும் போதே மாணவ,மாணவிகள் வாசிப்பு திறனை வளர்த்து கொள்வதால் எந்த விதமான தேர்வுகளிலும் வெற்றியை எளிதாக பெற முடியும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநாகராட்சி பள்ளிகளின் நோடல் அதிகாரி சதீஷ் குமார்,தி இந்து குழுமங்களின் தலைமை விற்பனை அதிகாரி ஜெகதீஷ்குமார், லயன்ஸ் சங்க அமைச்சரவை செயலாளர் ராஜ் மோகன், பொருளாளர்கள் சுப்ரமணியம், கனகராஜ் மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் லோகநாதன்,மோகன்ராஜ், மாவட்ட விருதுகள் தலைவர் வில்சன் தாமஸ், மண்டல தலைவர் மணிவண்ணன், சவேரியர்பாளையம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கர்ணன், தேவானந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவிகள் அனைவருக்கும் அப்துல் காலம் சிறப்பு கட்டுரை வெளியிட்ட தி இந்து ஆங்கில பத்திரிக்கை வழங்கப்பட்டது.
– சீனி, போத்தனூர்.