பிஎஃப் அமைப்பு 2022ஆம் நிதியாண்டுக்கான வைப்புத் தொகைக்கு எவ்வளவு வட்டி தொகையைச் செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட்டு உள்ளது, தற்போது வெளியான தகவல் படி சுமார் 7 கோடி ஊழியர்களுக்கு சுமார் 72000 கோடி ரூபாய் அளவிலான தொகையை அளிக்க வேண்டியுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த வருடம் பிஎப் கணக்காளர்கள் சுமார் 6-8 மாதம் வரையில் வட்டி பணத்திற்காகக் காத்திருந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா தொற்று போன்ற எந்த பெரிய பாதிப்புகளும் இல்லாத காரணத்தால் மத்திய அரசு தாமதிக்காமல் பணத்தை விரைவாகச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பிஎஃப் வட்டி விகிதம் 9 சதவீதம் இருந்தது. 8.1 சதவீதம் வட்டி வருமானம், அப்படியானால் உங்கள் பிஎப் கணக்கில் 1 லட்சம் ரூபாய் இருந்தால் உங்கள் 8100 ரூபாய் வட்டி பணம் கிடைக்கும்.
பிஎஃப் பேலன்ஸ் தெரிந்து கொள்வது எப்படி?
உங்கள் பிஎப் கணக்கில் இருக்கும் பேலென்ஸ் தொகையை தெரிந்துகொள்ளப் பல வழிகள் இருந்தாலும் மிஸ்டு கால் மூலம் செய்வது மிகவும் எளிதான ஒன்று. EPFO தளத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 இந்த எண்ணுக்கு அழைத்தால் மெசேஜ் வாயிலாகத் தகவல்களைப் பெறலாம். இதைத் தொடர்ந்து EPFO இணையதளம் வாயிலாகவும், UMANG செயலி வாயிலாகவும் உங்கள் பிஎப் பேலென்ஸ் தொகையை செக் செய்ய முடியும்.
மேலும் எஸ்எம்எஸ் வாயிலாகவும் பிஎப் பேலென்ஸ் தொகையை செக் செய்ய முடியும். 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO என்று மெசேஜ் செய்தால் போதுமானது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.