கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு உலக உடல் காய தின விழிப்புணர்வு பேரணி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சார்பில் நடைபெற்றது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பேரணியை புதிய சார்- ஆட்சியர் பிரியங்கா தொடங்கிவைத்தார்.
இந்த பேரணியில் அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சரவண பிரகாஷ், செவிலியர் கண்காணிப்பாளர்கள் ஜெயலட்சுமி, உமாமகேஸ்வரி, சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் சரவணன் நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நிறைவுற்றது.
பேரணியில் செவிலியர்கள் அபிராமி நர்ஸிங் கல்லூரி பயிற்சி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு காய தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை பொதுமக்களுக்கு செய்து காட்டினர்.
இதில் தீ காயம் ஏற்படும் போது நாம் மேற்கொள்ள வேண்டிய முதல் உதவிகள் என்ன என்பதை மாணவிகள் செய்து காண்பித்தனர். இதில் பொதுமக்கள் மருத்துவமனை ஊழியர்கள்
திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.