மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேற்று பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சப் கலெக்டர், பொள்ளாச்சி காவல் கண்கானிப்பாளர், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர், நகராட்சி தலைவர், மற்றும் முக்கிய நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர் சபர்மதி ஆசிரமத்திலிருந்து வாங்கப்பட்ட மகாத்மா காந்தியின் புகைப்படம் காந்தி சிலை அருகில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.
அதேபோல் காந்தி சிலை அருகில் பொள்ளாச்சி சேவாலயம் சார்பாக மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மகாத்மா காந்தியின் அரிய புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டது. இந்த அரிய புகைப்படக் காட்சியை பொதுமக்கள் காலை முதல் பார்த்து சென்றனர் சாலை அகலப்படுத்தும் பணிக்காக வெகு நாட்களுக்கு முன்பு வேறு இடத்தில் மாற்றி வைக்கப்பட்ட காந்தி சிலை காந்தி பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இங்கு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாளை வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.