மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா ?
கோவை போத்தனூர் பகுதி வார்டு எண் 98 மற்றும் 99 உட்பட்ட பகுதியில் தெரு நாய் தொந்தரவு அதிகமாக உள்ளது.
இங்கு வசிக்கும் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் வீதிகளில் நடக்கவே அச்சப்படுகிறார்கள், சாரதா மில் ரோடு, ஆட்டு தொட்டியில் இருந்து அம்மா உணவகம் செல்லும் சாலையில் தெரு நாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே செல்வதால் அடிக்கடி விபத்துகள் எற்படுகிறது,
மாநகராட்சி நிர்வாகிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய்களை கட்டுபடுத்த வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி…?
-செய்யத் காதர், குறிச்சி.