கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கேரளாவில் சில மாதங்களாகவே தென்மேற்கு பருவ மழை காரணமான பல மாவட்டங்களில் அதிகமான மழை பெய்து வந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவ மழை குறைந்துள்ளது மீண்டும் வங்காள விரிகுடா கடலில் அந்தமான் பகுதியில் ஏற்பட்ட உயரடுக்கு தாழ்வு நிலை காரணமாக இடுக்கி உட்பட 10 மாவட்டங்களில் அதிகமான மழை பெய்து கொண்டிருக்கிறது.
எனவே கேரளாவில் உள்ள 10 மாவட்டங்களுக்கு yellow alert ( மஞ்சள் எச்சரிக்கை )கொடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்றும் இடியோடு கூடிய பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையானது வியாழக்கிழமை வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.