பன்னாட்டு லயன்ஸ் 324 சி மாவட்டம் சார்பாக பல்வேறு சமுதாய நல பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் கீழ் வரும் கிளை சங்கங்களில் சமூக பணி மற்றும் சேவை பணிகளில் ஈடுபடுவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விருதுகள் வழங்கி கவுரவிக்கபடுகின்றனர்.
அதன் படி இந்த ஆண்டிற்கான பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மாவட்டத்தின் முதல் காலாண்டு விருதுகள் வழங்கும் விழா சுந்தராபுரம் லிண்டாஸ் மகால் அரங்கில் நடைபெற்றது.பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி மாவட்ட ஆளுநர் ராம்குமார் மற்றும் விருதுகள் தொடர்பு பிரிவு தலைவர் வில்சன் தாமஸ் தலைமையில் நடைபெற்ற விழாவில்,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முதல் துணை ஆளுநர் ஜெயசேகரன், இரண்டாம் துணை ஆளுநர் நித்யானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கூட்டு மாவட்ட தலைவர் எஸ்.வி.மாணிக்கம், கௌரவ அழைப்பாளராக முன்னால் மாவட்ட நீதிபதி முகம்மது ஜியாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய முக்கிய விருந்தினர்கள் லயன்ஸ் உறுப்பினர்கள் தன்னலம் பாராமல் சமூக சேவை பங்களிப்பில் தொடர்ந்து அதிகம் ஈடுபட வேண்டியும், இதற்கு அவர்களை ஊக்கபடுத்தும் விதமாகவே இது போன்ற விருதுகள் வழங்குவதாக தெரிவித்தனர். விழாவில், கடந்த மூன்று மாதங்களில் ஒவ்வொரு சங்கத்திலும் சேவை பணிகளில் சிறந்து பணியாற்றிய மண்டல தலைவர்கள் வட்டார தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் கூடுதல் உறுப்பினர் சேர்க்கை செய்த சங்கங்கள் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.
அதிக மக்களுக்கு சேவை செய்த சங்கங்களுக்கு 5 ஸ்டார், 4 ஸ்டார், 3 ஸ்டார் இரண்டு ஸ்டார் ஒரு ஸ்டார் என்ற தரவரிசையில் நட்சத்திர விருதுகளும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து சிறு குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக அனைத்து சங்க உறுப்பினர்களின் பங்களிப்பாக 61,500 ரூபாய் மருத்துவ உதவி தொகை அதே மேடையிலேயே வழங்கப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக மறைந்த அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு கலாம் மக்கள் அறக்கட்டளையின் நிறுவனரும், பன்னாட்டு லயன்ஸ் 324 சி மாவட்ட மக்கள் தொடர்பு தலைவர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினர்களுக்கு கலாம் உருவபடத்தை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
விழாவில், கூட்டு மாவட்ட தலைவர் கருணாநிதி, இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் பழனிச்சாமி,மாவட்ட அமைச்சரவை செயலாளர் ராஜ்மோகன், ராமலிங்கம் பொருளாளர் சுப்ரமணியம் கனகராஜ், பாஸ்கர் மற்றும் மண்டல, வட்டார, தலைவர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
– சீனி, போத்தனூர்.