கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய போது கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் இயற்கை உபாதைகளை கழிக்க செம்பாறை பகுதியில் கழிப்பிட வசதி இருந்தும் பயன்படுத்த முடியாமல் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் திறந்த வெளியில் இயற்கை உபதைகளை கழித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆனைமலை மேற்கு ஒன்றிய தலைவர் வெள்ளிங்கிரி தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் பிரியங்காவிடம் மனு அளித்தனர்.
மனுவில் ஆனைமலை தாலுகாவில் உள்ள பெரிய போது கிராம பஞ்சாயத்தில் ஏறக்குறைய 1100 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இக்கிராமத்திற்கு என கட்டப்பட்ட பயன்பாட்டில் இருந்த செம்பாறையில் உள்ள பொது கழிப்பிடத்தின் கழிவுநீர் தொட்டி உடைந்து கிட்டத்தட்ட 4 வருடங்களாகியும் சரி செய்யப்படவில்லை. இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர்
P.பத்மநாபன் அவர்களிடமும்,வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆனைமலையிலும், பலமுறை புகார் அளித்துள்ளோம். தகுந்த நடவடிக்கை இல்லாத காரணத்தால் கடந்த 29.06.2021 அன்று கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆனைமலை வருவாய் வட்டாட்சியர்,பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றுக்கு இப் புகாரை மனு மூலம் தெரிவித்துள்ளோம்.
எனினும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இன்றி பழுதடைந்த நிலையிலேயே பொதுமக்களுக்கு பயன்பாடற்று இருக்கிறது. இப்பிரச்சனையால் குழந்தைகளும், பெண்களும், வயதானவர்களும் பெரும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் சாலை ஓரங்களை கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
மேலும் செம்பாறை பகுதியில் அமைந்த குடியிருப்பு அனைத்தும் பாறை பகுதி என்பதால் தனிநபர் கழிப்பிடம் அமைக்கவும் முடியாத சூழ்நிலையில் பொதுமக்கள் இருப்பதால் இந்த பொது கழிப்பிடமே பிரதான பயன்பாடாக இருந்தது.
எனவே மக்கள் படும் கடும் சிரமத்தை மனதில் கொண்டு இப்போது கழிப்பிடத்தை சீர் செய்ய இம்மனுவை கருணை மனதோடு ஏற்றே தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டுமாய் பொதுமக்கள் சார்பாக பணிவுடன் வேண்டுகிறேன்.
என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில்;
“அடிப்படை வசதியின்றி எங்கள் பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது சரியான முறையில் சரியான அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பாக புகார் செய்தும் பயனில்லை இனியும் காலம் தாமதம் செய்தால் மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபடுவோம் மக்களுக்காக நாங்கள் துணை நிற்போம் என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார் பொள்ளாச்சி.