சூலூரில் இந்தியாவிலேயே முதன்முறையாக விருச்சுவல் ரியாலிட்டி முறையில் நவீன பொறியியல் தொழில்நுட்ப ஆய்வு மற்றும் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள அரசூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பன்னாட்டு நிறுவனத்தின் எக்ஸ்பீரியன்ஸ் இன்ஜினியரிங் என்ற உயர் தொழில்நுட்பம் கொண்டு ஆய்வு மையம் மற்றும் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுமார் 6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் பொறியியல் வடிவமைப்புகள் பொறியியல் வடிவமைப்புகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன. அதன் செயல்பாடு எத்தகையது என்பதை விருச்சுவல் ரியாலிட்டி மூலம் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள் மாதிரி வடிவங்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த வகையான அருங்காட்சியகம் சூலூரில் அமைக்கப்பட்டுள்ளது. க்யூ ஆர் கோடு மூலம் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இந்த வடிவமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் வடிவமைப்பு குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் நவீன முறையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வலைதளங்களில் இதற்கான வெப்சைடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இது குறித்து அறியும் வகையிலும் வெப்சைடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்ற இன்று முதல் இது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
– சீனி, போத்தனூர்.