நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் அசத்திய இந்தியா, 65 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 2-0 என தொடரை கைப்பற்றி கோப்பை வெல்லும். அதேபோல் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யலாம்.
எனவே இவ்விரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டி இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.