கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நவம்பர் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அம்பராம்பாளையத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பற்றி கூறியதாவது; போதைப் பொருட்கள் மற்றும் கள்ளச்சாராயம் மற்றும் மதுபானம் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், மாரடைப்பு ஏற்பட்டு உடனடி மரணம் சம்பவிக்கும்,நரம்பு தளர்ச்சி / கைகால் நடுக்கம் உண்டாகும்,பசியின்மை ஏற்படும், நினைவாற்றல் குறையும்.கண்பார்வை பறிபோகும், ஜீரண சக்தி குறையும், குடும்பத்தில் பணக்கஷ்டம் ஏற்படும்,குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பாகும்,உறவினர் / சுற்றத்தாரின் உறவுகள் பாதிக்கப்படும் என இது போன்ற பல தீமைகளிலிருந்து விடுபட கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை ஒழித்து
நாட்டிற்கும் வீட்டிற்கும் வளமை சேர்ப்போம் எனவும் போதை பொருட்களால் ஏற்படும் இழப்புக்கள் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே ஏற்படுத்தினர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.