தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர்/அமைச்சர் அனிதா. இராதா கிருஷ்ணன் ஆகியோரின் முழு முயற்சியில் உலமாக்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.
உலமாக்களுக்கு தமிழக அரசின் மூலம் சைக்கிள் வழங்கும் நிகழ்வு இனிதே காயல்பட்டினம் ஜலாலியவில், கனி மொழி கருணாநிதி M.P. அமைச்சர் அனிதா. இராதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த திட்டத்தின் மூலம் நம் உலமாக்களுக்கு வழங்கிட சைக்கிளை கொண்டு வந்து சேர்க்க, பின்னால் இருந்து எந்த சப்தமும், ஆரவாரமும் இல்லாமல் செயல்பட்டவர் சமூக சேவகி, சகோதரி சித்தி ரம்ஜான் அவர்கள் மாவட்ட பிற்பட்டோர் நலத்துறையுடன் இணைந்து, ஆட்சியர் திரு. செந்தில் ராஜ் கேட்டு கொண்டபடி, முந்திய நாளில் சைக்கிள்களை தூத்துகுடியில் இருந்து நமது ஊருக்கு லாரியில் நேரடியாக ஏற்றும் இடத்தில் நின்று பார்வையிட்டு ஏற்றி, அவரே அந்த லாரிகளுக்கு முன்பு, அவர் காரில் நமதூருக்கு வழி காட்டி லாரிகளை அழைத்து வந்து, இரவு 1 மணிவரை ஜலாலியவில் தானே அங்கு நேரில் நின்று மேற்பார்வை செய்து, துளிர் தன்னார்வ தொண்டர்கள் உதவியுடன் சகோதரி சித்தி ரம்ஜான் அவர்கள் சைக்கிள்களை இறக்கி வைத்துள்ளார்கள்.
அடுத்த நாள் காலை விழா நாளன்று பயானளி உலமாக்களை, மத்ரஸா ஒஸ்தாதுகளை ஒருங்கிணைத்து, அவர்களை நேரடியாக ஒவ்வொருவரையும், அலைபேசியில் தொடர்பு கொண்டு ஜலாலியவுக்கு வரவழைத்து, அதிகாரிகளுடன் இணைந்து, அவரே நேரடியாக ஒவ்வொருவரின் உலமா அட்டைகளை சரி பார்பதில் ஈடுபட்டு, அதில் பிரச்சினை இருந்தாலும், அதிகாரிகளுடன் பேசி அதை உடனுக்குடன் சரி செய்து, பயனாளி உலமாக்கள் அனைவருக்கும் உடனுக்குடன் தாமதமின்றி சைக்கிள் வழங்குவதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்கள்.
இது அரசு மற்றும் தி.மு. கழகத்தின் விழா என்ற போதிலும், சமூக சேவகி சகோதரி சித்தி ரம்ஜான் அவர்களின் இந்த தன்னார்வ பணி பாராட்டுக்குரியது.
இது போன்று மாவட்டம் முழுவதும் பயனாளிகளாக தேர்வு பெற்று சைக்கிள் பெற்ற மஸ்ஜித் உலமாக்கள், இமாம்கள், முஅத்தின்கள், பணியாளர்கள் மத்ரஸா
ஆலிமாக்கள், ஒஸ்ததுகள் ஆகியோரை உலமா நலவாரியதில் பதிவு செய்து அடையாள அட்டை பெறுவதற்கு கடந்த ஒரு வருடம் முன்பு நமதூர் “துளிரில்” உலமா நல அட்டை பதிவு அதாலத்/முகாமை மாவட்ட ஆட்சியரிடம் தனிப்பட்ட முறையில் பேசி, அந்த துறை அதிகாரிகளை அழைத்து வந்து ஏற்பாடு செய்துள்ளார்கள்.
அன்றைய தினம், கலந்து கொண்ட உலமாக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ் நாடு அரசு உலமாக்களுக்கு வழங்கும் நலத்திட்ட உதவிகள் பற்றி விளக்கிட விழிப்புணர்வு கூட்டமும் ஏற்பாடு செய்திருந்தார்கள்..
உலமாக்களுக்கு உதவும் நல திட்டம் மூலம் 185 பயனாளிகளுக்கு தமிழக அரசு மூலம் சைக்கிள் பெற்றுத்தந்த நமது பரளுமன்ற உறுப்பினர்.கனிமொழி கருணாநிதி,நமது சட்ட மன்ற உறுப்பினர், அமைச்சர் அண்ணாச்சி.அனிதா ராதா கிருஷ்ணன், ஆட்சியர். செந்தில் ராஜ்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நல அலுவலர் விகனேஷ்
நகர் மன்ற தலைவர் முத்து ஆலிம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சித்தி ரம்ஜான் பொன்னாடை வழங்கி கௌரவித்தார்.
மேலும் சகோதரி சித்தி ரம்ஜான், மத்திய, மாநில அரசு மாவட்ட – PMJVK திட்ட அமுலாக்க குழு உறுப்பினர், அந்த திட்டத்தின் மூலம் நம்தூர் சிவன் கோவில் தெரு பின்பகுதியில் பல கோடி ரூபாய் திட்டத்தில் சமூக நல கூடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டு, அது இப்போது கட்டி முடிக்கப்படும் நிலையில் கட்டிடம் உயர்ந்துள்ளது. இப்படி, அரசின் பல்வேறு நல திட்டங்களை நமதூரின், மக்களின் நலனுக்கும் தொடர்ந்து செய்து வருகிறார்.
மேலும் இவர், ஆட்சியர் தலைமையில் செயல்படும் தூத்துக்குடி மாவட்ட முசுலிம் பெண்கள் உதவும் சங்கத்தின் இணை செயலர், இந்த அமைப்பின் மூலம் மாவட்டத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள பெண்கள் பல பேருக்கு சுய தொழில் செய்ய ரூபாய் 10,000/- அரசு உதவி பெற்று தந்துள்ளார். இவர் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகளின் நன் மதிப்பையும் பெற்று அவர்களுடன் நல் இணக்கமான தொடர்பில் உள்ளார்.
சமூக சேவகி. சகோதரி சித்தி ரம்ஜான் அவர்களின் சேவைகளை மக்கள் பல்வேறு அரசு நல திட்ட உதவிகளை பெறுவதற்கு நமதூரின் பொது அமைப்புகளும் , மக்களும் இவர் மூலம் அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அரசு நல திட்ட உதவிகளை பெற்று பயன் பெறலாம். காயல்மாநகரின் நம்பிக்கை நட்ச்சத்திரமாக திகழும் சகோதரி சித்தி ரம்ஜான் அவர்களின் சேவைகளை நாளைய வரலாறு வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறது
நாளைய வரலாறு செய்தியாளர்
-அன்சாரி,நெல்லை.