கோவையிலிருந்து சேலம் வழியாக செல்லும் 10 ரயில்கள் ரத்து! பயணிகள் ஏமாற்றம்!!

சேலம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கோவை வழியாக இயக்கப்படும் 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 3ம் தேதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் டிசம்பர் 3-ம் தேதி கோவையிலிருந்து காலை 6.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறப்பட்டுச் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12680), சென்னையிலிருந்து மதியம் 2. 30 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12679) ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6.10 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12675), கோவையில் இருந்து பிற்பகல் 3. 15 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறப்பட்டுச் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12676), சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7. 10 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் சதாப்திஎக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12243), கோவையில் இருந்து பிற்பகல் 3. 05 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறப்பட்டுச் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12244) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், கோவையில் இருந்து காலை 5. 45 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூரு புறப்பட்டுச் செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 22666), கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து மதியம் 2. 15 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 22665), கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து காலை 6. 10 மணிக்கு எர்ணாகுளம் புறப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12677), எர்ணாகுளத்தில் இருந்து காலை 9. 10 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூரு புறப்பட்டுச்
செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12678) ஆகியவை வரும் 3-ம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப் படுகிறது.

கோவை – சேலம் மெமு ரயில் ரத்து: மேலும், வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை கோவையிலிருந்து காலை 9. 05 மணிக்கு சேலம் புறப்பட்டுச் செல்லும் மெமு ரயில் (எண்: 06802), சேலத்திலிருந்து மதியம் 1. 40 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் மெமு ரயில் (எண்: 06803) ஆகியவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp