கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் கோவை குற்றால அருவி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவாணி மலையில் பெய்த தொடர்மழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
பெய்த மழை குறைந்தது. இதன் காரணமாக, கோவை குற்றால அருவிக்கு தண்ணீரின் வரத்தும் குறைந்தது. இதனால் அங்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.