கோவை சுமங்கலி ஜூவல்லர்ஸ் உடன் டீ பியர்ஸ் பார்எவர்மார்க்கின் இணைந்து செயல்பட ஒப்பந்தம்
அறிமுக விழாவில் திரைப்பட நடிகை அதுல்யா ரவி பங்கேற்பு!!
டீ பியர்ஸ் பார்எவர்மார்க், உலகின் முன்னணி மற்றும் நம்பகமான வைர நகை பிராண்டாகும். இந்நிறுவனம் தென்னிந்தியாவில் நகை வர்த்தக நிறுவனமான சுமங்கலி ஜூவல்லர்ஸடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான அறிமுக விழாவில் திரைப்பட நடிகை அதுல்யா ரவி பங்கேற்றார்.
தங்க நகை மற்றும் வைர நகை வர்த்தகத்தில் மிகவும் ஸ்திரமான இருபெரும் நிறுவனங்கள் ஒன்றிணைந்து தனித்துவமிக்க மிகச் சிறப்பான தரமான வைர நகைகளை அளிக்க உள்ளன. இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து உலகின் பிரபலமான அரிய மற்றும் இயற்கையில் பெறப்பட்ட அரியவகை வைரங்களை மிகச் சிறப்பாக வடிவமைத்து, பிரத்தியேக ஆபரணங்களாக வழங்க உள்ளன. அழகிய வைர நகைகள் என்றாலே அது டீ பியர்ஸ் பார்எவர்மார்க் தயாரிப்புகள்தான் என்று குறிப்பிட்ட நடிகை அதுல்யா ரவி மேலும் கூறுகையில், டீ பியர்ஸ் பார்எவர்மார்க் மற்றும் சுமங்கலி ஜூவல்லர்ஸ் நிறுவனங்கள் இணைந்த இந்நிகழ்வில் பங்கேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் வைர நகை என்பது மிகவும் மறக்க முடியாத தருணாகும். அந்த வகையில் இன்று எனது வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாத நாளாகும். டீ பியர்ஸ் பார்எவர்மார்க் தயாரித்த மிக அழகிய நகைகளைக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நகைகள் அனைத்துமே மிகவும் அரிய வகை, கைகளால் அழகுற வடிவமைக்கப்பட்டவை. கோவை நகரைச் சேர்ந்த பெண்கள் இயற்கையான, நம்பகமான ஜொலிக்கும் வைர நகைகளை அணிந்திருக்கிறோம் என்று பெருமையாக கூறிக் கொள்ளலாம் என்றார்.
நாளைய வரலாறு செய்திக்காக
– சீனி,போத்தனூர்.