கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில்,2018-மற்றும் 19 ஆம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் டாக்டர் ஆர். நந்தினி தலைமையில் நடைபெற்ற விழாவில்
தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சிலின் உறுப்பினர் செயலர் டாக்டர். ஆர். சீனிவாசன், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருவதாகவும், அறிவியல், கணினி, விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் உள்ள நவீன கால தொழில் நுட்பங்களை இளம் தலைமுறை மாணவிகள் தொடர்ந்து கற்று கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து, 2018 மற்றும் 2019 ஆண்டுக்கான இளங்கலை மற்றும் முதுகலை பயின்ற 2531 மாணவிகளுக்கும் 45 ராங்க் பெற்றவர்களுக்கும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக இந்தியாவின் குறிப்பிடத்தக்க விஞ்ஞானிகளில் ஒருவராக “ஆசிய விஞ்ஞானி” இதழில் இடம்பெற்ற புது தில்லியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளரான டாக்டர். ஸ்ரீவாரி சந்திரசேகர் காணொளி காட்சி வாயிலாக கல்லூரி மாணவிகளிடையே பேசினார்.
விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் மீனா, செயலர் டாக்டர் யசோதா தேவி, மாணவியர்கள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.