குனியமுத்தூர் பகுதிக்கு வருகை தந்த திராவிட முன்னேற்றக் கழக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அவர்களை சந்தித்து 87வது வார்டில் மழையின் காரணமாக ஏற்ப்பட்டுள்ள தண்ணீர் தேக்கம், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை தமுமுக- மமகவின் சார்பாக முன்வைத்தார்கள்.
இதனை அடுத்து ரவி அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவாக வாக்குறுதி அளித்தார்.. இதில் தமுமுக – மமக தலைவர் நசீர், மமக செயலாளர் ஜமீஸா, கிளை பொருளாளர் யாசர் மற்றும் கிளை துணை தலைவர் ரஹ்மதுல்லாஹ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.