கோவை மாவட்டம் ஆனைமலையில் ஆலம் விழுது குழுவினர் சார்பாக ஆனைமலை சுற்றுவட்டாரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஊர் கூடி மரம் வளர்ப்போம் உலகை பசுமை ஆக்குவோம் என்ற நோக்கில் ஒவ்வொரு வார ஞாயிற்றுக் கிழமையும் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நட்டு பாதுகாத்து பராமரித்து வருகின்றனர்.
இந்த வகையில் நவம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
166-வது வார களப்பணியாக சேத்துமடை முதல் வேட்டைக்காரன் புதூர் வரை சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை பிடுங்கி மரங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இது பற்றி அவர்கள் கூறியதாவது மனிதன் வாழ்வதற்கு தூய்மையான காற்றைக் கொடுப்பது மரங்கள் எனவே மரங்களை பாதுகாக்க வேண்டும், மரங்களில் ஆணிகள் அடிப்பதால் மரங்களின் ஆயில் தன்மை குறைகிறது எனக் கூறப்படுகிறது மேலும் நமது அடுத்து தலைமுறையினருக்கு தூய்மையான காற்று நீர் சுகாதாரமான கிராமத்தை கொடுத்துச் செல்வோம் என்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.