சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம் பிரான்மலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நாளை (16/011/2022) மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடக்கவுள்ள இந்த மக்கள் தொடர்பு முகாமில் கணினி திருத்தம், முதியோர் ஊக்கத்தொகை வழங்குதல், பட்டா வழங்குதல், சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற பலதரப்பட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் தரலாம். மக்களிடம் பெறப்படும் மனுக்களில் உடனடியாக தீர்வு காண வாய்ப்புள்ள மனுக்களுக்கு அங்கேயே தீர்வு காணப்படும். மீதமுள்ள மனுக்களின் மீது வருவாய் துறையினரால் சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும்.
முகாமில் வருவாய் வட்டாட்சியர், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர், மண்டல துணை தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர், தேர்தல் துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கால்நடை மருத்துவத்துறை, தோட்டக்கலைத்துறை, விவசாயத்துறை போன்ற பல்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நாளை (16/011/2022) காலை 10 மணி முதல் மதியம் 1.30வரை முகாம் நடைபெற உள்ளது.
– பாரூக், சிவகங்கை.