சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் இராமசுப்பிரமணியன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் கலைச்செல்வி ஆகியோர் வரவேற்றனர். சிங்கம்புணரி வருவாய் வட்டாட்சியர் சாந்தி தலைமை தாங்கிய இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். முகாமில் 65 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினர். மேலும் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கணினி திருத்தம் என மொத்தம் 129 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
முகாமில் சிங்கம்புணரி தனி வட்டாட்சியர் ஆனந்த், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, மண்டல துணை வட்டாட்சியர் சிவராமன், வருவாய் ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முரளி, சிங்கம்புணரி எஸ்.எஸ்.கோட்டை மற்றும் வாராப்பூர் உள்வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரால் பிரான்மலை வள்ளல் பாரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.