ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை சேர்க்கும் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் பள்ளிகள் அளவிலான செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வண்ணமாக நவம்பர் 14 குழந்தைகள் தினம் முதல் டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினம் வரை பல்வேறு நிகழ்ச்சிகளை வட்டார வள மையம் சார்பாக ஏற்பாடு செய்துள்ளது. ஆனைமலை ஒன்றியம் மாற்றுத்திறன் மாணவர்களைப் பற்றிய நட்புணர்வை வளர்க்கும் விதமாக இணைவோம் மகிழ்வோம் செயல்பாடுகள் சிறப்பாக PUPS ஆனைமலை, மற்றும் GHSS ஆனைமலையில் நடைபெற்றது. இதில் காகித பறவை செய்தல், கை அச்சினை வண்ணங்கள் பூசி பதித்தல், பலூன் பறக்க விடுதல, சிறப்பாக நடைபெற்றது.
வட்டார கல்வி அலுவலர்கள் திரு சின்னப்பராஜ் வட்டார மேற்பார்வையாளர் பொறுப்பு ஜெயந்தி அவர்கள் IE ஒருங்கிணைப்பாளர் அவர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள், தலைமையாசிரியர், சிறப்பு
பயிற்றுநர்கள் கலந்து கொண்டுடனர். இதை தொடர்ந்து டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று சைகை மொழியில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் சிறார் திரைப்படம் அனைத்து பள்ளிகளிலும் திரையிட பட உள்ளது.
சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் ஆனைமலை வட்டார வள மையங்களில் நடைபெற உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.