சூலூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் டிரைவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈரோட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 40) ஈரோட்டில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தார் இவருடன் கிளீனராக துரைசாமி என்பவர் இருந்தார்.
அந்த லாரி கோவை அருகே உள்ள எல் அண்டு டி பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சென்று கொண்டிருந்த பொழுது கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த கண்டெய்னர் உடன் நேருக்கு நேர் மோதியது இதில் முட்டை ஏற்றி வந்த லாரியில் இருந்த கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த கிளீனர் துரைசாமி, கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த நித்திஸ், கிளீனர் தீபக் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அருண்குமார் கிணத்துக்கடவு.