சென்னை புறநகர் பகுதிகளின் 50 கிராமங்களில் உள்ள 422 சாலைகளை 60 மீட்டர் வரை விரிவாக்கம் செய்ய சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்துள்ளது.
சென்னை பெருநகருக்கான 2 பெருந்திட்டத்தின் அடிப்படையில் சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள 422 சாலைகளை விரிவாக்கம் செய்ய சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இந்த சாலைகள் பெரும்பாலும் சென்னையில் புறநகர் பகுதியில் அமைந்துள்ளனது. இதன்படி மண்ணிவாக்கம், அனகாபுத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், பருத்திப்பட்டு, பெருங்கொளத்தூர், செக்காடு, வரதராஜபுரம், தண்டரை, குன்றத்தூர், வளஞ்சியம்பாக்கம், மன்ஞ்சேரி, ஈசா பல்லாவரம், மூனறாம் கட்டளை, பம்மல், சிறுகளத்தூர், குள்ளமணிவாக்கம், மலையம்பாக்கம், மாங்காடு, காட்டுப்பாக்கம், சிக்கராயபுரம், அரியன்வாயல், காவனூர், கொல்லைச்சேரி, மீஞ்சூர், நசரேத் பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன.
மேலும் பீர்க்கன்காரணை,மேலகரம், மடவிளாகம், மேப்பூர், நெடுஞ்சேரி, பூந்தமல்லி, திருமழிசை, அக்ரஹாரம், உடையார் கோவில், திருநீர்மலை, குளப்பாக்கம், நெடுஞ்குன்றம், புத்தூர், கெருகம்பாக்கம், கோவூர், மௌலிவாக்கம், நடுவீரப்பட்டு, நந்தம்பாக்கம், பரணிபுத்தூர், பெரியபனிச்சேரி, பூந்தண்டலம், தண்டலம், இரண்டாங்கட்டளை, தரப்பாக்கம், திருமுடிவாக்கம், பழந்தண்டலம், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், வல்லூர், அனைக்கட்டுச்சேரி, ஆயலச்சேரி, சொக்கநல்லூர், கண்ணப்பாளையம், காட்டுபாக்கம், கீழ்மணம்பேடு, கோலப்பன்சேரி, கொரட்டூர், நேமம், பாரிவாக்கம், சித்துக்காடு, திருக்கோவில்பட்டு, திருமணம், வெள்ளவேடு, பாலவாயல், செந்தரம்பாக்கம், சிறுகாவூர், விளங்காடுப்பாக்கம், அருமந்தை,புதூர், கிருடலாபுரம், கண்டிகை, கொடிப்பளம், மடியூர், மராம்பேடு, நாயர்,நெற்குன்றம், பாடியநல்லூர், பெருங்காவூர் ஆகிய கிராமங்களில் உள்ள சாலைகளும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
குறைந்தபட்சம் 9 மீட்டர் முதல் அதிகபட்சம் 60 மீட்டர் வரை சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
உத்தேசிக்கப்பட்டுள்ள சாலை விரிவாக்கத்தை காண்பிக்கும் வரைபடம், எண்.1, காந்தி இர்வின் சாலை, சென்னை- 600 008-ல் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகை, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் தகவல் மற்றும் ஆலோசனை மையத்தில் அனைத்து வேலை நாட்களிலும் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கும். இந்த உத்தேசிக்கப்பட்ட சாலை விரிவாக்கத்தின் மீது ஆட்சேபணை / ஆலோசனை / முறையீடுகள் செய்ய விரும்புவர்கள், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர்-செயலருக்கு இந்த அறிவிக்கை வெளியான தேதியிலிருந்து 21 தினங்களுக்குள் எழுத்து மூலம் தெரிவிக்கலாம்,
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ருக்மாங்கதன் வ., வடசென்னை.