ஜிம்னாஸ்டிக் போட்டியில் 6 தங்கபதக்கங்களையும்
3வெள்ளி 1 வென்கலம் வென்ற கோவை மாணவர்கள் ஆதில், ஆசிப் !!!
நேற்று கோவையில் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிநடைபெற்றது. இதில் நடைபெற்ற
ஆறு போட்டிகளில் பங்கு பெற்ற கோவை கரும்புக்கடை பகுதியை சார்ந்த மைதீன் அவர்களின் இளைய மகன் ஆதில் அவர்கள் ஐந்து போட்டிகளில் தங்கப்பதக்கமும், ஒரு போட்டியில் வெண்கல பதக்கமும் வென்று மாவட்ட அளவில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
இன்னொரு மாணவன் ஆசிப் அஹமது ஆறு போட்டிகளில் பங்கு பெற்று ஒரு தங்கமும்,
மூன்று வெள்ளியும் பெற்று மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார்கள். ஆசிப் அஹமது கோவை மாவட்ட தமுமுக செயலாளர் முஜீப் அவர்களின் மகன் என்பது குறிப்பிடதக்கது.
பெற்றோருக்கும் கோவைக்கும் தஞ்சைக்கும் பெருமை சேர்த்த மாணவன் ஆதில் நாளைய வரலாறு மாத இதழின் தஞ்சை நிருபர் மைதீனின் இளைய மகன் என்பது குறிப்பிடதக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.