கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரயிலுக்காக துடியலூர் ரயில்வே கேட் இரவு 7 மணி அளவில் மூடப்படும் நேரத்திற்கு முன்பாக
சுமார் 30 டன் எடையுள்ள சரக்கு லாரி ரயில்வே கேட் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது தண்டவாள உயரம் காரணமாக கடக்க முடியாமல் நிலை தடுமாறி அப்படியே தண்டவாளத்தின் நடுவே பழுதாகி நின்றுவிட்டது.
லாரி நின்றுவிட்ட அதே நேரத்தில் கோவை மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் வருவது உறுதியானது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து ரயிலுக்கு கேட் கீப்பர் உடனடியாக சிகப்பு விளக்கை காண்பித்து லாரிக்கு 100 மீட்டர் முன்பாக ரயிலை நிறுத்தினார். இதன் காரணமாக லாரி மீது ரயில் மோதும் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனை அடுத்து லாரியை அப்புறப்படுத்த பொதுமக்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு பிற வாகன உதவவியுடன் அப்புறப்படுத்தினர்.
இதனை அடுத்து காத்திருந்த பயணிகள் ரயில் 1 மணி நேர தாமதத்திற்கு பின் கோவை நோக்கி புறப்பட்டு சென்றது.
நாளைய வரலாறு செய்திக்காக,
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.