தளபதி விஜயின் மக்கள் இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கு அவ்வப்போது பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். மேலும் ரத்ததானம் கண் தானம் போன்ற சேவைகளையும் செய்து வருகின்றனர்.
அதுபோல் கர்ப்பிணிப் பெண்களுக்கு “விலையில்லா விருந்தகம்” என்ற திட்டத்தை துவக்கி அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவாக வழங்கிட வேண்டும் என்கிற நற்செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.
பொன்னாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த கர்ப்பிணி பெண்களுக்கு உணவு வழங்கப்பட்டது. முதல் வாரமாக சுமார் 53 கர்ப்பிணி பெண்கள் இந்த விலையில்லா விருந்தகம் என்ற திட்டத்தின் மூலம் பயனடைந்தார்கள். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த கர்ப்பிணி பெண்களுக்கு லெமன் சாதம் ,தக்காளி சாதம் ,முட்டை , மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.
தளபதி விஜய் அவர்களின் கர்ப்பிணிப் பெண்களுக்கான விலையில்லா விருந்தகத் திட்டம் இனி வாரவாரம் செவ்வாய்க் கிழமையில் நடைபெறும் என்று தளபதி விஜய் அவர்களின் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்தார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஹரிசங்கர் கோவை வடக்கு.