தூத்துக்குடியில் போலி போதைப் பொருள், வயர்லெஸ் கருவிகளை வைத்திருந்த 3பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே மாவட்ட கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி, தர்மராஜ், வேல்ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் சோதனை நடத்தியதில் சில பாக்கெட்டுகள் இருந்தன. அவை போதை பொருட்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்தது.
அப்போது அங்கு ஒருவர் மர்ம நபர்கள் வைத்திருந்த பொருட்களை வாங்குவதற்காக வந்தார். அவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து 3 பேரையும் பிடித்து தென்பாகம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ தொடர் விசாரணையில் அவர்களிடம் இருந்தது போலியாக தயார் செய்யப்பட்ட போதை பொருட்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் போலீசார் பயன்படுத்தும் வயர்லெஸ் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.