தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு !!!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கு நவ.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட சுகாதார சங்க தலைவர்/ மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் NHM Schemeல் (TAEI, Geriatric, Pain and Palliative Care and CEmONC) கீழ் ஒப்பளிக்கப்பட்டுள்ள ஒப்பந்த பணியிடங்களில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு ஆண்/ பெண் நபர்களிடமிருந்து தனித்தனியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்களின் எண்ணிக்கை / தொகுப்பூதியம் / கல்வித்தகுதி:

Radiographer – 2, ரூ.13,300/- P.M, Passed in B.Sc Radiography / DRTT / DRDT / Degree / Certificate Course from any recognized University,

Physiotherapist -1, ரூ.13,000/- P.M, Passed in Bachelor of Physiotherapy / degree certificate from any recognized University,

Multipurpose Health Worker -6, ரூ.8500/- P.M, Passed in 8th Std, Security Guard – 4, ரூ.8500/- P.M, Passed in 8th Std

மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் உரிய கல்வி தகுதி தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் படித்ததற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் (Resume) இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு: மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அப்பணியிடங்கள் எக்காரணம்கொண்டும் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி. விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2022. நிர்ணயிக்கப்பட்ட 10.11.2022 பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-முனியசாமி ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp