பல்லாவரம் தர்கா சாலை மிகவும் மோசமாக உள்ளது கண்டு கொள்ளுமா தாம்பரம் மாநகராட்சி!!!!
தாம்பரம் மாநகராட்சியின் 17 வது வார்டு பல்லாவரம் தர்கா சாலையிலிருந்து திரிசூலம் செல்லும் பாதையில் ஒரு சிபிஎஸ்சி பள்ளி உள்ளது அதில் 1500 குழந்தைகள் படிக்கிறார்கள். தற்பொழுது இந்த சாலை சேரும் சகதியும் ஆக இருக்கிறது. இது தொடர்பாக ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 தினங்களாக தாம்பரம் மாநகராட்சி பகுதிக்கு பல துறை செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் வந்து ஆய்வு செய்கின்றார்கள், அவர்கள் இந்த சாலையையும் வந்து பார்வையிடுவார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.