கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் இருந்து போத்தனூர் செல்லும் சாரதா மில் ரோடு பகுதியில் தொடக்கப்பள்ளி அருகே இரண்டு வேகத்தடைகள் உள்ளன அதில் ஒரு வேகத்தடை மிகவும் பழுதடைந்து பள்ளமாக உள்ளது அந்த வேகத்தடையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அனைவருமே மிகவும் சிரமப்பட்டு தான் கடந்து செல்ல வேண்டி உள்ளது.
மேலும் கனரக வாகனங்கள் அந்த வேகத்தடையை தாண்டி செல்லும் பொழுது பள்ளத்தில் இறங்காமல் இருப்பதற்காக வண்டியை வளைத்து ஓட்டி செல்கிறார்கள் அதனால் இதுவே வரும் வாகனங்களுக்கு வழி கிடைக்காமல் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும் பள்ளம் தெரியாமல் வண்டியை பள்ளத்தில் இறக்கும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.எனவே இதனை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.