திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 53 வயதான திரு மூர்த்தி, இவரது மகன் கோவை காளபட்டி சாலையில் உள்ள என்ஜிபி கல்லூரியில் மூண்றாமாண்டு பயின்று வருகின்றார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் உணவு அருந்த காளபட்டி சாலையில் உள்ள எல்லோ ஹிட் ரெஸ்டாரென்ட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகின்றது. அப்பொழுது இரு பிரிவினர்களில் ஒருவர் வீசியெறிந்த பாட்டில் கர்லூரி மாணவர் தலையில் விழுந்தது. இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் கல்லூரி மாணவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நேற்று பீளமேடு காவல்நிலையத்தில் கல்லூரி மாணவரின் தந்தை திரு மூர்த்தி புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட இரு பிரிவினர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர்கள், அதில் பாட்டிலை கொண்டு வீசியவர்கள் யார், என்று விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.