கேரள மாநிலம், பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில் நேற்று காலை ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது நடைமேடையில் துாங்கிக் கொண்டிருந்த நபரை சோதனையிட்டபோது அவர் வைத்திருந்த துணி பையில் எவ்வித ஆவணமும் இன்றி 44 லட்சம் ரூபாய் பணத்தை கண்டுபிடித்தனர்.
மேற்கொண்டு அவரை விசாரணை செய்ததில் அவர், மதுரை லட்சுமிபுரம் கிழக்கு வாசலை சேர்ந்த ரவி, 52, என்பதும், பெங்களூரில் இருந்து ரயிலில் வந்து சாலை மார்க்கமாக கோழிக்கோடு சென்று அங்குள்ள நபருக்கு அப்பணத்தை வழங்க இருந்ததும் தெரியவந்தது. எந்தவித ஆவணமும் இல்லாத பணம் என்பதால் வருமான வரித் துறையினரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டு மேற்கொண்டு ரவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.