பிரம்மாண்டமாக நடைபெற்ற திமுக மாணவர் அணி கூட்டம்.
மதுரை அருகே கருப்பாயூரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மாணவர் அணியின் மாநில மாவட்ட மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று மாலை தொடங்கியது.
மாநில மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் MLA மற்றும் மாநில இணை மற்றும் துணை செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தின் நிறைவில் பல்வேறு கருத்துக்களை முன் வைத்து
8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநில மாவட்ட மாநகர அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உட்பட
500ற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். மேலும் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் பிரம்மாண்டமாக அசைவ உணவுகள் பரிமாறப்பட்டு புதுவிதமான உணர்வுமிகுந்த கூட்டமாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக
-ச.கலையரசன்
மகுடஞ்சாவடி.